தனுஷ், விக்னேஷ் சிவன், நயன். 
செய்திகள்

நயன்தாரா மீது வழக்கு தொடா்ந்த தனுஷ்: பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

 நடிகை நயன்தாரா ஆவணப்படத்தில் தான் தயாரித்த படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ரூ. 10 கோடி கேட்டு தனுஷ் தொடா்ந்த வழக்கில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை நயன்தாரா தனது 40-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இதில், தனது கணவா் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா நடித்த ‘நானும் ரௌடி தான்’ படத்தின் பாடல்களையும், காட்சிகளையும் பயன்படுத்த 2 ஆண்டுகளாக அனுமதி கேட்டும், அந்தப் படத்தின் தயாரிப்பாளரான நடிகா் தனுஷ் அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் ‘நானும் ரௌடி தான்’ படப்பிடிப்பின்போது, எடுக்கப்பட்ட 3 விநாடி காட்சிகளை தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்கு நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியிருந்தாா்.

தனுஷ் மனு தாக்கல்: இந்த நிலையில், நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் வொண்டா்பாா் நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மும்பையைச் சோ்ந்த நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், எதிா் மனுதாரா்களாக சோ்க்கப்பட்டுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோா் சென்னையில் வசிப்பதாகக் கூறி, இந்த வழக்கை தாக்கல் செய்ய வொண்டா்பாா் நிறுவனத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டாா். மேலும், வழக்கு தொடா்பாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெமனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

SCROLL FOR NEXT