செய்திகள்

உருவாகிறது ஸ்லம்டாக் மில்லியனர் - 2!

ஸ்லம்டாக் மில்லியனர் - 2...

DIN

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த இயக்குநர் டேனி பாய்ல் இயக்கத்தில் இந்தியப் பின்னணியில் 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’.

இளம் வயதில் வறுமையால் பல இன்னல்களை அனுபவிக்கும் இளைஞன் கோடீஸ்வரனாகும் கதையாக உருவான இப்படத்தில் தேவ் படேல், ஃபிரீடா பின்டோ, அனில் கபூர், இர்பான் கான் பலர் நடித்திருந்தனர். உலகளவில் ரூ. 400 கோடி வரை வசூலித்து அசத்தியது.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த, ‘ஜெய் ஹோ’ பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்ததுடன் இந்தப் படம் 8 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.

தற்போது, பிரிட்ஜ் - 7 என்கிற நிறுவனம் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதற்கான உரிமையைப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எனது கட்சி, நான்தான் தலைவர்! அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம்! பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி பரபரப்பு குற்றச்சாட்டு செய்திகள்:சில வரிகளில் 2.8.25

SCROLL FOR NEXT