ரூ. 400 கோடியை நெருங்கும் தேவரா!
ஜூனியர் என்டிஆர் நடித்து வெளியான தேவரா ரூ. 400 கோடி வசூலை நெருங்கியுள்ளது.
ஜூனியர் என்டிஆரின் 30வது படமான தேவரா வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. கொரடால சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பங்களிப்பைச் செய்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 400 கோடியை நெருங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கலவையான விமர்சனங்களையே பெற்றதால் முதல் நாளைத் தவிர்த்து (ரூ. 172 கோடி) அடுத்தடுத்த நாள்களில் வசூல் குறைவானது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.