தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதியின் 50ஆவது படமான மகாராஜா மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியைப் பெற்று தந்தது.
தற்போது, பல மிஷ்கினின் டிரைன் படத்தில் நடித்து வருகிறார். ஆறுமுககுமார் இயக்கத்தில் ஏஸ் படத்திலும் வெற்றி மாறனின் விடுதலை 2 படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், ஏற்கனவே ஹிந்தியில் படப்பிடிப்பு முடிந்த காந்தி டாக்கீஸ் படம் குறித்து விடியோ வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி.
”சில நேரங்களில் மெளனம் மிகவும் சத்தமாக இருக்கும். என்னுடைய பிறந்த நாளில் என்னுடைய புதிய படத்தின் போஸ்டரை வெளியிடுகிறேன். காந்தி டாக்ஸ் என்கிற மெளனப் படத்தினால் புதிய சவாலுக்கும் புதிய தொடக்கத்துக்கும் தயாராகியுள்ளேன். உங்களுடைய அன்பும் வாழ்த்துகளும் எனக்குத் தேவை” எனப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
காந்தி டாக்ஸ் படத்தை கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ளார். இதற்கு முன்பு சில மராத்தி படங்களை கிஷோர் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதரி, சித்தார்த் ஜாதவ் நடித்துள்ளார்கள்.
ஹிந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது.
படப்பிடிப்பு விடியோவுடன் விரைவில் வெளியாகுமென கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.