கானல் பூவு தொடரில் - ஆதி குணசேகரன், ஈஸ்வரி இன்ஸ்டாகிராம்
செய்திகள்

மலையாள எதிர்நீச்சல்: 2வது திருமணம் செய்துகொண்ட ஆதி குணசேகரன்!

மலையாளத்தில் கானல்பூவு என்ற பெயரில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது எதிர்நீச்சல் தொடர்.

DIN

எதிர்நீச்சல் தொடர் தமிழில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், மலையாளத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் ஒளிபரப்பானதுபோலவே பிற்போக்குத்தனம் நிறைந்த வீட்டில், திருமணம் செய்துகொண்டு வந்த நான்கு மருமகள்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழில் எதிர்நீச்சல்

புகுந்த வீட்டிற்கு வரும் மருமகள், மாமியார் - நாத்தனார் போன்ற உறவுகளால் பிரச்னைகளை எதிர்கொள்வதைப் போன்ற தொடர்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், மருமகள் மூலம் மாமியார் வீட்டிலுள்ள பிற்போக்குத்தனங்களை கேள்வி கேட்கும் தொடராக எதிர்நீச்சல் எடுக்கப்பட்டது.

எதிர்நீச்சல்

இதனால், எதிர்நீச்சல் தொடரின் பல காட்சிகள் தமிழகத்தில் சர்ச்சையாகி பலரின் கவனம் பெற்றது. எதிர்நீச்சல் தொடரில் இருந்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நக்கல், நைய்யாண்டி, வில்லத்தனம், வெகுளி என தனித்து இருந்ததது. இதனால், கதாபாத்திரங்களின் பெயர்களாகவே எதிர்நீச்சல் தொடரின் நடிகர் - நடிகைகள் அடையாளம் காணப்பட்டனர்.

எதிர்நீச்சல் நாயகிகள்

இவ்வாறு தமிழில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் பாத்திரம் யாராலும் எளிதில் மறக்க முடியத அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்கும். தமிழில் மாரிமுத்துவும், (மாரிமுத்துவின் மறைவுக்குப் பின்னர்) பின்னர் வேல ராமமூர்த்தியும் நடித்திருந்தனர். நைய்யாண்டி நிறைந்த கம்பீரமான பாத்திரம். ஒருநீண்ட இடைவேளைக்குப் பிறகு குணசேகரன் பாத்திரம் மீண்டும் கதைக்குள் வரும். அப்போது நாயகன் அளவுக்கு மாஸாக காட்டப்பட்டிருக்கும்.

இதையும் படிக்க | கண்ணான கண்ணே சீரியல் நாயகியின் புதிய தொடர்!

இவருக்கு ஈஸ்வரி (தமிழில் கனிகா) என்ற மனைவியும் ஒரு மகளும் மகனும் இருப்பர். இவரின் மகளைத் தேடுவதிலேயே எதிர்நீச்சல் தொடரின் இறுதிக் காட்சிகள் முடிந்தன.

கானல்பூவு

மலையாளத்தில் எதிர்நீச்சல்

இந்நிலையில், மலையாளத்தில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் (காணல்பூவு) தொடரில் ஆதி குணசேகரன் பாத்திரம், மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வருவதைப் போன்று காட்டப்பட்டுள்ளது. இதனைக் கண்ட ஈஸ்வரி (மலையாள ஈஸ்வரி) அதிர்ச்சி அடைகிறார்.

மலையாளத்தில்....

இந்தக் காட்சிகள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும், இரண்டாவது திருமணம் செய்துகொண்டு வீட்டு வாசலில் தலைகுனிந்து வெட்கத்துடன் நிற்கும் ஆதி குணசேகரனை - இவரா ஆதி குணசேகரன் என தமிழ் ரசிகர்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

மலையாளத்தில் பைஜு தேவராஜ், இத்தொடரை இயக்குகிறார்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள்! - முழு விவரம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT