ஆலியா பட்டின் ஆல்ஃபா ரிலீஸ் தேதி!
நடிகை ஆலியா பட் நடிப்பில் உருவாகும் ஆல்ஃபா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஆலியா பட் நடிப்பில் உருவாகும் ஆல்ஃபா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2012-இல் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் அறிமுகமான நடிகை ஆலியா பட் கங்குபாய் கதியவாடி படத்தில் தேசிய விருது பெற்றார்.
ஆலியா பட் நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பினைப் பெற்றன.
Advertisement
இதையும் படிக்க: விஜய் 69: தொழில்நுட்பக் குழு அறிவிப்பு!
ஹாலிவுட்டில் ஆர்ட் ஆஃப் ஸ்டோன் படத்தில் வொண்டர் வுமன் நடிகை கால் கோடட் உடன் நடித்துள்ளார். இந்தப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அசத்திவரும் ஆலியா பட் ஜிக்ரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அக்.11ஆம் தேதி வெளியாகிறது.
தற்போது ஆல்ஃபா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ஷர்வாரியும் உடன் நடிக்கிறார். ஷிவ் ராவாலி இயக்கும் இந்தப் படத்தை ஒய்.ஆர்.எஃப். ஸ்பை யுனிவர்ஸில் ஒரு பகுதியாக உருவாகிவருகிறது.
ஆக்ஷன் படத்தில் நடிக்கும் ஆலியா பட்டின் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறது. ஸ்பை யுனிவர்ஸில் பதான், டைகர், வார் ஆகிய படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நகாஷ்மீரில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தப்படம் அடுத்தாண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாக டிச.25ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.