இமயமலையில் தொலைந்த அணுசக்தி சாதனம்... மிஸ்டர் எக்ஸ் படத்தின் முன்னோட்ட விடியோ!
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் படத்தின் முன்னோட்ட விடியோ குறித்து...
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.
இமயமலையில் தொலைந்த அணுசக்தி சாதனத்தைப் பற்றிய உண்மைக் கதையை வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் முன்னோட்ட விடியோ ‘எபிசோட் 1’ என்ற பெயரில் படக்குழுவினர் இந்தப் படத்தினைக் குறித்து பேசி விடியோ வெளியிட்டுள்ளது.
இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் ஆர்யா, சரத்குமார், மஞ்சு வாரியர், கெளதம் கார்த்திக், அனகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தின் டீசரில் ரகசிய ராணுவ வீரர்களான ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக் ஆகியோர் நாட்டின் பாதுகாப்புக்காக ரகசிய ஆபரேஷன் ஒன்றை மேற்கொள்ளும் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளியாகியுள்ள எபிசோட் 1 எனும் முன்னோட்ட விடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. இந்தப் படம் வரும் ஏப்.17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
MrX - a look into the real incidents that inspired the fictional world of the film
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.