தகப்பன் படத்தின் தணிக்கைச் சான்றிதழ்..! கால அளவு எவ்வளவு?
நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள தகப்பன் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் குறித்து...

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள தகப்பன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவரம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு யு/ஏ தரப்பட்டுள்ளது.
லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக தகப்பன் படத்தில் நடித்துள்ளார்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பின்னணியில் அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படத்தில் ரஜிஷா விஜயன் நாயகியாக நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான ‘தங்கபுள்ள’ சில நாள்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், சமீபத்தில் இரண்டாவது பாடலான ’சொக்க வச்சாளே’ வெளியாகியது.
இந்த நிலையில், படத்திக்கு மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. 13 வயதுக்குக் குறைவான குழந்தைகள் பெற்றோர்களுடன் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்தப் படத்தின் கால அளவு 2 மணி நேரம் 10 நிமிஷம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.