முகப்பு

ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்பட இரண்டாவது பாடல் வெளியீடு!

ஜீவா நடித்துள்ள தகப்பன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

34 வினாடிகள் முன்பு
ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்பட இரண்டாவது பாடல் வெளியீடு!
ரஜிஷா விஜயன் - ஜீவா
பகிர்:

ஜீவா நடித்துள்ள தகப்பன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தகப்பன்’.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பின்னணியில் அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படத்தில் ரஜிஷா விஜயன் நாயகியாக நடிக்கிறார். மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

இப்படத்தின் முதல் பாடலான ‘தங்கபுள்ள’ சில நாள்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது பாடலான ’சொக்க வச்சாளே’ வெளியாகியுள்ளது.

மோகன் ராஜன் எழுதியுள்ள இப்பாடலை ஹரிசரண், சைந்தவி மற்றும் நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இத்திரைப்படம் டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

summary

Second song from Jiiva’s film ‘Thagappan’ released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.