முகப்பு
செய்திகள்

வா வாத்தியார் வெளியீடு எப்போது?

Updated On : 6 அக்டோபர், 2024 at 7:39 AM
பகிர்:

கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்று வெற்றிப்படமாகியுள்ளது. காதல், ஆக்சன் இல்லாமல் இரு ஆண்களின் பழைய நினைவுகளாக உருவான இப்படம் நல்ல விமர்சனங்களையே பெற்றது.

தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். 

இப்படத்தில் நாயகியாக கிருத்தி ஷெட்டியும், வில்லனாக நடிகர் சத்யராஜும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் ராஜ்கிரணும் நடிக்கின்றனர். படத்திற்கு ‘வா வாத்தியார்’ எனப் பெயரிட்டுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தை கிறிஸ்துமஸ் வெளியீடாக டிச. 26 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →