முகப்பு
செய்திகள்

ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா!

சூர்யாவின் அடுத்த பட அப்டேட்...

Updated On : 7 அக்டோபர், 2024 at 10:57 AM
பகிர்:

நடிகர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை முடித்தபிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சூர்யா யார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இயக்குநர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணைகிறாரா இல்லை சுதா கொங்காராவுடனான பேச்சுவார்த்தை துவங்குமா என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முற்றிலும் எதிர்பாராத வகையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யாவின் 45-வது படத்தை நடிகர் ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் கங்குவா வெளியீட்டிற்குப் பின் துவங்கலாம் எனத் தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →