கமல்ஹாசனுடன் நடிகர் சிவகார்த்திகேயன்.  
செய்திகள்

அப்பாதான் அமரன் படம் நடிக்க முக்கியக் காரணம்..! சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

அமரன் படத்தில் நடிக்க முக்கியக் காரணம் தனது அப்பா என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

DIN

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது.

அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கதையின் நாயகியான சாய் பல்லவியின் அறிமுக விடியோ வெளியானது.

சமீபத்தில், முதல் பாடலான ‘ஹே மின்னலே’ பாடல் வெளியானது. ஜி. வி. பிரகாஷின் 700-வது பாடலாக இது உருவாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் அப்பாவின்மீது மிகுந்த பாசம் வைத்துள்ளவர். ஏற்கனவே, டான் படத்தில் இந்த உணர்ச்சிகள் இருந்தன. படமும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமரன் புரமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:

அமரன் படத்தில் நடிப்பதற்கு முக்கியக் காரணங்களுல் ஒன்று எனது அப்பா. சிறிய வயதிலிருந்து காக்கிச் சட்டையைப் பார்த்து வளர்ந்தவன் நான். இராணுவத்தின் சட்டை நிறமும் இதன் நிறமும் வேறாக இருக்கலாம். ஆனால், பொறுப்பு ஒன்றுதான்.

இந்தப் படத்தின் கதை கேட்கும்போதும் படப்பிடிப்பின்போதும் நான் உணர்ந்துகொண்டது மேஜர் முகுந்தனுக்கும் எனது அப்பாக்கும் நிறைய ஒற்றுமைகளைப் பார்த்தேன். படம் வெளியானபிறகு அதைப் பற்றி பேசுகிறேன்.

இதுவரை கமல் சார் எனது படங்களைப் பார்த்தாரா தெரியவில்லை. இந்தப் படத்தில் பார்த்தாக வேண்டிய கட்டாயம். இந்தப் படத்தின் காட்சிகள் கமல் சாரும் இராணுவ வீரர்களும் பார்ப்பார்கள் என்பதால் ஒரு பதற்றம் இருந்தது. சரியாக செய்ய வேண்டுமென பொறுப்பும் இருந்தது.

இராணுவ வீரராக நடித்த முதல்காட்சியில் எனக்கு ஒரு பெருமிதம் இருந்தது. திரையரங்குகளில் ரசிகர்கள் கை தட்டும்போது நாமும் நடிகர் ஆகிவிட்டோமென இருக்கும். அமரன் படத்தில்தான் ராணுவ வீரராக நடித்த முதல் காட்சிக்குப் பிறகே எனக்கு நானே ஹீரோ ஆகிவிட்டதுபோல உணர்ந்தேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT