நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.
தெலுங்கில் ஜூனியர் என் டிஆர் உடன் தேவரா படத்தில் நடித்துள்ளார். கொரடால சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: பாலினம் கடந்தவர் சமந்தா..! தெலுங்கில் பேசிய ஆலியா பட்!
இசையமைப்பாளர் அனிருத் இசை கவனம் பெற்றது. இப்படம் உலகளவில் ரூ. 400 கோடியை நெருங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தேவரா படத்தின் இயக்குநர் ஜான்வி கபூர் குறித்து கூறியதாவது:
எனக்கு வடக்கு, தெற்கு குறித்த விஷயங்களின்மீது நம்பிக்கையில்லை. இங்குள்ள மக்கள் ஜான்வியை தென்னிந்தியாவைச் சேர்ந்தவரென்றே நம்புகிறார்கள். ஏனெனில், ஸ்ரீ தேவி மேடம் எங்களுடையவர்கள் எனக் கருதுகிறார்கள். அதனால், இங்கு கிராமங்களில்கூட ஜான்வியை தங்களது சொந்த மகள் என்றே கருதுகிறார்கள்.
இதையும் படிக்க: சித்தியாக மாறிய சமந்தா..! வைரல் விடியோ!
ஜான்வி தெலுங்கில் நடிக்க நாங்கள் பல காலம் காந்திருந்தோம். ஜூனியட் என்.டி.ஆரும் ஜான்வியும் சிறந்த ஜோடியாகவே கருதுகிறோம் என்றார்.
தேவரா படத்துக்குப் பிறகு ஜான்வி கபூர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஹிந்தியில் சன்னி சன்ஸ்காரி கி துல்சி குமாரி, தெலுங்கில் ஆர்சி16 படங்களில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.