செய்திகள்

வேட்டையன் முதல் நாள் முதல் காட்சி பார்த்த விஜய்!

வேட்டையன் படத்தைப் பார்த்த விஜய்...

DIN

வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நடிகர் விஜய் பார்த்துள்ளார்.

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வியாழக்கிழமை வெளியானது.

படத்தின் டீசர் மற்றும் டிரைலர் நினைத்த வரவேற்பைப் பெறாததால், வேட்டையனுக்கான டிக்கெட் முன்பதிவுகள் சுமாராகவே இருந்தன.

இதனால், முதல் நாளில் இந்தியளவில் வேட்டையன் ரூ. 30 கோடி வசூலித்ததாகத் தகவல் வெளியானது. ஜெயிலரின் முதல் நாள் வசூலான ரூ.48 கோடியை முறியடிக்கவில்லை.

இதையும் படிக்க: தேவரா ரூ. 500 கோடி வசூல்!

தொடர்ந்து, வேட்டையனுக்கு கிடைத்த வரவேற்பால் இப்படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இப்படம் முதல் மூன்று நாளில் இந்தியளவில் ரூ. 85 கோடியையும் உலகளவில் ரூ. 120 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம், விஜய்யின் ’கோட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், உலகம் முழுவதும் ரூ. 455 கோடி வசூலித்திருப்பதாக படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார்.

மேலும், இப்படம் திரையரங்க பங்கீட்டுத் தொகையாகவே ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் நடிகர் விஜய், தயாரிப்பாளர் ஏஜிஎஸ் அர்ச்சனா, விநியோகிஸ்தர் ராகுல் ஆகியோர் இணைந்து கேக் வெட்டி இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடியுள்ளனர்.

இதையும் படிக்க: கூலியில் அமீர் கான்!

இந்த நிலையில், படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு நேர்காணல் ஒன்றில், நடிகர் விஜய்யுடன் இணைந்து வேட்டையன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். இரண்டு நாள்களுக்கு முன்பாகவே இத்தகவல் வெளியாகியிருந்தாலும், இதனை வெங்கட் பிரபு உறுதி செய்ததால் ரசிகர்களிடையே ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

SCROLL FOR NEXT