பிளாக் படத்தின் மஜிலி பாடல் விடியோ!
ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள பிளாக் படத்தின் மஜிலி பாடல் விடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய பிளாக் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழின் முன்னணி நடிகராக இருந்தாலும் வெற்றிப் படத்தைக் கொடுக்க முடியாமல் இருந்தார் ஜீவா.
நீண்ட காலத்திற்குப் பின் ஜீவா பிளாக் படத்தில் வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
Advertisement
Advertisement
கேஜி பாலசுப்ரமணி இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் ஹாரராக உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரிதாகக் கவனம் பெற்று வருகிறது. அக். 11 ஆம் தேதி வெளியானபோது சில திரைகளே ஒதுக்கப்பட்டிருந்தன.
தற்போது, படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் மஜிலி எனும் பாடல் விடியோ வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.