முகப்பு
செய்திகள்

கங்குவா இசை வெளியீட்டுத் தேதி!

கங்குவா இசை வெளியீடு குறித்து...

Updated On : 20 அக்டோபர், 2024 at 5:49 AM
பகிர்:

கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா - சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இப்படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. பின், வேட்டையன் திரைப்படத்தின் வெளியீட்டால், கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளதாகத் தகவல்.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாமோஸ் பிரிங்கார் பேப்’ என்கிற இரண்டாவது பாடலை அக். 21 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற அக். 26 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல்.

முழு கட்டுரையைப் படிக்க →