நானும் ரௌடி தான் திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முக்கியமான நடிகையாக இருக்கிறார் நயன்தாரா.
கடைசியாக நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுமில்லாமல் சர்ச்சையிலும் சிக்கியது.
தற்போது, டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்சிக், தனி ஒருவன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மண்ணாங்கட்டி, டெஸ்ட் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.
இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். நானும் ரௌடிதான் படம் 21 அக்.2015அன்று வெளியானது.
மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படமாக இந்தப்படம் அமைந்தது. இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா கூறியதாவது..
தனது இன்ஸ்டா பக்கத்தில் நயன் கூறியதாவது:
எனது வாழ்க்கையை ஆசிர்வதிக்கவும் மாற்றவும் வந்த படம் இது. 9 வருடங்களுக்கு முன்பு நானும் ரௌடிதான் ரிலீஸ் ஆனது. மக்களிடம் இருந்து புதிய அன்பைக் கொடுத்த படம். எப்போதும் மறக்க மாட்டேன். நடிகையாக புதிய பாடங்கள், அனுபவங்கள், புதிய நினைவுகள். அத்துடன் புதிய உறவு. எனக்கு இந்தப் படத்தையும் என்னவனையும் கொடுத்த விக்னேஷுக்கு நன்றி.
சிறப்புவாய்ந்த படமென எப்போதும் தொடர்ந்து நினைவிருக்கம்படியான நினைவுகளுடன் நான் சேகரித்து வைத்திருந்த சில புகைப்படங்களை பகிர்க்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.