செய்திகள்

துப்பறிவாளன் - 2 அப்டேட்!

துப்பறிவாளன் படப்பிடிப்பு குறித்து..

DIN

நடிகர் விஷாலின் துப்பறிவாளன் - 2 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். செல்லமே படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமான விஷால், இறுதியாக ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையில், அரசியலுக்கு வருவது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில், தேவைப்பட்டால் அரசியலுக்கு வருவேன் என்பதுபோல் தெரிவித்திருக்கிறார். 

இதையும் படிக்க: அமரன் டிரைலர் தேதி!

தொடர்ந்து, விஷால் லண்டனில் துப்பறிவாளன் - 2 படத்தின் படப்பிடிப்பைத் துவங்கி ஒரே கட்டத்தில் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், படப்பிடிப்பை இன்னும் துவங்கவில்லை. அறிவிப்பு போஸ்டர் மட்டுமே வெளியானது. அதில், இசை - இளையராஜா என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் விஷால் துப்பறிவாளன் - 2 படப்பிடிப்பை வருகிற டிசம்பர் மாதம் துவங்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு லண்டன், மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

முதலில், இப்படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்க இருந்தார். ஆனால், விஷாலுக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மிஷ்கின் இப்படத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை விபத்தில் கரூரைச் சோ்ந்தவா் உயிரிழப்பு

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: 6 இடங்களில் 2,968 மனுக்கள்!

சேவை குறைபாடு: தனியாா் நிதி நிறுவனத்தினா் ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

துவரங்குறிச்சியில் நாளை மின்நிறுத்தம்

SCROLL FOR NEXT