நடிகைகள் மிருணாள் தாக்குர், ருக்மணி வசந்த். 
செய்திகள்

சூர்யாவுக்கு ஜோடியாக மிருணாள் தாக்குர், ருக்மணி வசந்த்?

சூர்யா - 45 படத்தில் ருக்மணி வசந்த் இணைந்துள்ளதாகத் தகவல்...

DIN

சூர்யாவின் 45-வது படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை முடித்தபிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சூர்யா யார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இயக்குநர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணைகிறாரா இல்லை சுதா கொங்காராவுடனான பேச்சுவார்த்தை துவங்குமா என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முற்றிலும் எதிர்பாராத வகையில் சூர்யாவின் 45-வது படத்தை நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கவுள்ளதாவும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் துவங்கவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக மிருணாள் தாக்குர் மற்றும் ருக்மணி வசந்த் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சப்த சாகரதாச்சே எல்லோ (கன்னடம்) படத்தின் மூலம் பெரிதாகக் கவனம் பெற்ற ருக்மணி வசந்த், தமிழில் விஜய் சேதுபதியுடன் ஏஸ் என்கிற படத்திலும் சிவகார்த்திகேயனுடன் எஸ்கே - 23 படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT