அஸ்வதி  இன்ஸ்டாகிராம்
செய்திகள்

மலையாளத்தில் நடிக்கும் தமிழ் சீரியல் நடிகை!

மலர், மோதலும் காதலும் உள்ளிட்டத் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை அஸ்வதி.

DIN

மலர், மோதலும் காதலும் உள்ளிட்டத் தொடர்களில் நடித்து புகழ் பெற்ற சின்னத்திரை நடிகை அஸ்வதி மலையாளத் தொடரில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் அபூர்வராகம் என்ற தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆசிரியையாக இத்தொடரில் நடிக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மலர் தொடரிலிருந்து நடிகை பிரீத்தி சர்மா விலகினார். அவருக்கு பதிலாக மலர் தொடரில், நடிகை அஸ்வதி நடித்ததன் மூலம் தமிழ் சின்னத்திரையில் நாயகியாக அறிமுகமானார்.

இந்தத் தொடரில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மோதலும் காதலும் தொடரில் நாயகியாக நடித்தார். இதில் இவர் நடித்த வேதா என்ற பாத்திரம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது.

கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மற்றொரு வடிவமாக மோதலும் காதலும் தொடர் எடுக்கப்பட்டது. ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுகளையும் பெற்றது.

இதையும் படிக்க | சுந்தரி தொடர் விரைவில் முடிகிறது!

இந்தத் தொடர் முடிந்த நிலையில் தற்போது மலையாளத்தில் புதிய தொடரில் அஸ்வதி நாயகியாக நடித்து வருகிறார். அபூர்வராகம் எனப் பெயரிடப்பட்டுள்ள இத்தொடரில் ஆசிரியையாக அஸ்வதி நடிக்கிறார்.

கேரளத்தை பிறப்பிடமாகக் கொண்ட அஸ்வதி, 2021ஆம் ஆண்டு மனசினக்கர என்ற தொடரில் நடித்திருந்தார். எனினும் நாயகியாக தற்போது மலையாளத்தில் நடிப்பதால் ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT