முகப்பு
செய்திகள்

அரண்மனை - 5 விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அரண்மனை 5 திரைப்படம் குறித்த அப்டேட்...

Updated On : 25 அக்டோபர் 2024, 10:50 am IST
இணையத்தில் வைரலாகும் அரண்மனை 5 போஸ்டர்.
பகிர்:

அரண்மனை படத்தின் 5 பாகம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

அரண்மனை - 4 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிப்படமானதுடன், ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.

முதல் மூன்று பாகங்களுக்குக் கிடைத்ததைவிட அதிக வரவேற்பு இப்படத்திற்குக் கிடைத்ததால், அடுத்ததாக இதன் 5 ஆம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் சுந்தர். சி இருப்பதாகத் தகவல் வெளியானது.

Advertisement

இணையத்தில் வைரலாகும் போஸ்டர்.

இந்த நிலையில், அரண்மனை - 5 படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுந்தர். சி இயக்கும் இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பரில் துவங்கவுள்ள நிலையில், அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.