மெளனிகா, சந்தோஷ் இன்ஸ்டாகிராம்
செய்திகள்

அண்ணா தொடர் நடிகருடன் இணைந்த லப்பர் பந்து பட நடிகை!

அண்ணா தொடரில் நடித்துவரும் நடிகர் சந்தோஷுக்கும் நடிகை மெளனிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

DIN

அண்ணா தொடரில் நடித்துவரும் நடிகர் சந்தோஷுக்கும் நடிகை மெளனிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இவர்களுக்கு திரைத் துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கன்னத்தில் முத்தமிட்டால்' தொடரில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் சந்தோஷ். மனிஷாஜித் மற்றும் திவ்யா பத்மினி கதாநாயகிகளாக நடிக்க, சந்தோஷ் நாயகனாக நடித்திருந்தார்.

குடும்ப பின்னணியை கொண்ட, காதல் தொடராக ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடர், ஹிந்தி தொடரின் மறு உருவாக்கமாகும்.

இந்தத் தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. சந்தோஷ் அண்ணா தொடரில் நடித்து வந்தார். தற்போது அந்தத் தொடரிலிருந்தும் விலகியுள்ளார். திரைப்படங்களுக்கான வாய்ப்புகளைத் தேடி வருகிறார். இவர், புதிய பார்வை என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார்.

இவருக்கும், நடிகை மௌனிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

சந்தோஷ், மெளனிகா நிச்சயதார்த்த படங்கள்

சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த 'லப்பர் பந்து' படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்தவர் மெளனிகா. கனா காணும் காலங்கள் போன்றவற்றில் நடித்து பிரபலமானவர். லப்பர் பந்து படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

சந்தோஷும் மெளனிகாவும் சின்ன திரையில் நடிக்கும் ஆரம்பக்கட்டத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு வீட்டில் பெற்றோர் சம்மதம் தெரிவித்ததால், இருவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இதன் புகைப்படங்களை இருவரும் தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இவர்களுக்கு திரைத் துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | ரஜினி, விஜய் பாணியில் புதிய தொழில் தொடங்கிய எதிர்நீச்சல் நடிகை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

SCROLL FOR NEXT