செய்திகள்

வீர தீர சூரன் அப்டேட்!

DIN

வீர தீர சூரன் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வீர தீர சூரன்.

இரு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் வேகமாக நடைபெற்று வருகிறது. தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முன்னதாக, இப்படத்தில் 18 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி இடம்பெற்றிருப்பதை நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், படத்தின் சில நொடி டீசர் காட்சியை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், வீர தீர சூரனின் தமிழக வெளியீட்டு உரிமையை ஃபைவ் ஸ்டார் கே. செந்தில் பெற்றிருப்பதை அறிவித்துள்ளது. இப்படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT