முகப்பு
செய்திகள்

விடாமுயற்சி டப்பிங் பணிகள் தொடக்கம்!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகிவரும் விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியது.

Updated On : 28 அக்டோபர், 2024 at 7:42 PM
டப்பிங் பணிகளில் ஆரவ் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகிவரும் விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் இன்றுமுதல் (அக். 28) தொடங்கியுள்ளன.

முதல் நாளான இன்று நடிகர் ஆரவ் உள்ளிட்டோரின் காட்சிகளுக்கு டப்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை லைகா நிறுவனம் பகிர்ந்துள்ளது.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ்திருமேனியுடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இவருடன் அர்ஜூன், ஆரவ், திரிஷா, ரெஜினா கெஸான்ட்ரா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Advertisement

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது.

நீண்ட நாள் கழித்து வந்த அப்டேட்

விடாமுயற்சி படம் திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு அஜர்பைஜானில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

சமீபகாலமாக விடாமுயற்சி படத்தின் எந்தவொரு அப்டேட்டும் வராமல் இருந்தது. இது அஜித் ரசிகர்களுக்கு குறையாகவே இருந்தது வந்தது.

தற்போது ரசிகர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் புதிய தகவலைப் பகிர்ந்துள்ளது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், டப்பிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இதில் மகிழ் திருமேணி, ஆரவ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை லைகா நிறுவனம் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.