பில்லா மறுவெளியீட்டுத் தேதி!
நடிகர் அஜித் குமார் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பில்லா திரைப்படம் மறுவெளியீடாக உள்ளது.
பில்லா திரைப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் விஷ்னு வர்தன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது. தொடர்ந்து, அஜித் பில்லா - 2 படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
இப்படம் வெளியாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள நிலையில், தயாரிப்பு நிறுவனம் பில்லா திரைப்படத்தைத் மறுவெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். தற்போது, மே 1 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
ஆனந்தா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் நடிகர் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த டான் படத்தின் தழுவல் ஆகும். டான் படத்தை நடிகர் ரஜினிகாந்த் ‘பில்லா’ என ரீமேக் செய்திருந்தார். அஜித்தின் பில்லாவும் சில மாறுதல்களுடன் வெளியானது.
The re-release date for the movie Billa
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.