மாரி செல்வராஜ் - கார்த்தி.  
செய்திகள்

மாரி செல்வராஜ் தந்தையின் கதை..! கார்த்தியின் புதிய பட அப்டேட்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படம் குறித்து தயாரிப்பாளர் கூறியதாவது...

DIN

நடிகர் கார்த்தியின் மெய்யழகன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைச் சந்தித்தாலும் கதையாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. தற்போது, சர்தார் - 2 படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் மாரி செல்வராஜ், வாழை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்குப் பின் நடிகர் தனுஷை வைத்து படம் இயக்க உள்ளார். நடிகர் கார்த்தியை வைத்து திரைப்படம் இயக்க உள்ளதை மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார்.

இது குறித்து தயாரிப்பாளர் பிரின்ஸ் ஃபிக்சர்ஸ் தயாரிப்பாளர் லக்‌ஷ்மணன் கூறியதாவது:

கடந்த ஆண்டே கார்த்தியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டது. ஒருமணி நேரம் கதை கேட்டிருப்பார். கார்த்திக்கு மிகவும் பிடித்திருந்தது. மாரி செல்வராஜ் அவர்களின் தந்தை வாழ்க்கையில் நடந்த உண்மைக் கதையை மையமாக இந்தக் கதை உருவாகவிருக்கிறது. மிகவும் பாதிக்கும் வகையில் இந்தப்படம் இருக்கும் என்றார்.

கார்த்தி தற்போது சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். வா வாத்தியாரே படம் போஸ்ட் புரடக்‌ஷன் நிலையில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகியின் ஆக்ரா வருகை ரத்து

தீராநதி... பூனம் பாஜ்வா!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?

மயிலழகு... பிரனிதா சுபாஷ்!

SCROLL FOR NEXT