முகப்பு
செய்திகள்

தனுஷ் - 56 படப்பிடிப்பு எப்போது? மாரி செல்வராஜ் அறிவிப்பு!

தனுஷ் - மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு குறித்து...

Updated On : 28 பிப்ரவரி 2026, 5:58 pm IST
தனுஷ் - மாரி செல்வராஜ்
பகிர்:

இயக்குநர் மாரி செல்வராஜ் தான் இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இறுதியாக இயக்கிய பைசன் திரைப்படம் விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமானது.

அடுத்ததாக, நடிகர் தனுஷின் 56-வது திரைப்படத்தை மாரி இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியானது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் துவங்கும் என்றும் வரலாறும் அரசியலும் கலந்த திரைப்படமாக இது இருக்கும் என்றும் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டணியில் உருவான கர்ணன் பெரிதாகக் கவனிக்கப்பட்டதால் தனுஷ் 56 படம் மீது எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

இதற்கிடையே, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள தனுஷ் - 55 படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.