மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படப்பிடிப்பு தொடக்கம்!
மஞ்சணத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்...
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் மஞ்சணத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இறுதியாக இயக்கிய பைசன் திரைப்படம் வணிக மற்றும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமானது. தொடர் வெற்றிகளைக் கொடுப்பதால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகவும் மாரி செல்வராஜ் வளர்ந்துள்ளார். அவருக்கான ஓடிடி வணிகமும் பெரிதாகியுள்ளதால், பலரும் மாரி செல்வராஜ் திரைப்படங்களைத் தயாரிக்க முனைப்பு காட்டுகின்றனர்.
தற்போது, மாரி செல்வராஜ் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான நவ்வி ஸ்டூடியோஸ் மூலம் மஞ்சணத்தி என்கிற திரைப்படத்தை இயக்குகிறார்.
Advertisement
Advertisement
இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க, நடிகர்கள் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
Filming for the movie Manjannathi, directed by Mari Selvaraj, has begun.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.