மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன்: மாரி செல்வராஜ்
மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன் என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளது பற்றி...
நீட் விவகாரத்தில் மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன் என இயக்குநர் மாரி செல்வராஜ் வியாழக்கிழமை (ஜூலை 23) தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) போராடி வருகின்றனர்.
சிஜேபியினரின் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து லடாக்கைச் சேரந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Advertisement
Advertisement
போராட்டக் களமான ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது தில்லி காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியும் பேரணியைக் களைத்தனர். இந்த சம்பவம் நாட்டிலேயே பரபரப்பான சூழலை ஏற்படுத்திய நிலையில் போராட்டத்துக்கு திரை பிரபலங்கள் உள்பட அரசியல் கட்சிகள், தலைவர்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆதரவு பெருகி வருகிறது.
இதுகுறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல் எத்திசையில் இருந்து ஒலித்தாலும் அத்திசைக்கு பெரும் நம்பிக்கையையும் வலிமையையும் சேர்ப்பதே என் கலையின் நேர்மை என்பதை உறுதியாக நம்புகிறேன். நீட் எனும் ஆணவப்போக்குக்கு எதிராக ஆவேசமாக களமாடும் அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Director Mari Selvaraj stated on Thursday (July 23) that he stands in solidarity with the students regarding the NEET issue.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.