மாரி செல்வராஜ் தயாரிப்பில் நடிக்கும் அமீர்!
மாரி செல்வராஜ் தயாரிக்கும் திரைப்படத்தில் அமீர் நடிக்கிறார்...
இயக்குநர் மாரி செல்வராஜ் புதிய திரைப்படத்தைத் தயாரித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாளிலிருந்து பைசன் வரை அவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் வணிக ரீதியாகவும் மிக வெற்றிகரமான இயக்குநராகவும் இருக்கிறார்.
தற்போது, மஞ்சணத்தி என்கிற திரைப்படத்தை இயக்கும் பணிகளில் உள்ளார். கயாடு லோஹர் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மாரி செல்வராஜ் தன்னுடைய நிவி ஸ்டியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் மாகாளி என்கிற திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.
இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அரவிந்த் இயக்க, கதாநாயகனாக இயக்குநர் / நடிகர் அமீர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
Director Mari Selvaraj is producing a new film.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.