FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இளையராஜா சிம்பொனி வெளியீட்டுத் தேதி!

சிம்பொனி இசையை வெளியிடுகிறார் இளையராஜா...

Updated On : 31 அக்டோபர் 2024, 7:05 pm IST
பகிர்:

இளையராஜா தன் முதல் சிம்பொனி இசையின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார்.

இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சில மாதங்களுக்கு முன் சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து, அவரது இசையமைப்பில் வெளியான ஜமா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

மேலும், சமீப காலமாக வெளியாகும் பல திரைப்படங்களில் இளையராஜா இசையமைத்த பழைய பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இளையராஜா தான் இசையமைத்த முதல் சிம்பொனி இசையை அடுத்தாண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இவரே, இந்தியாவின் முதல் சிம்பொனி இசையை வெளியிடும் இசையமைப்பாளர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments