செய்திகள்

சூப்பர் ஸ்டார் வருவதுதான் சரி... உணர்ச்சியுடன் பேசிய சூர்யா!

கங்குவா வெளியீடு குறித்து சூர்யா பதில்...

DIN

கங்குவா திரைப்படத்தின் வெளியீடு குறித்து நடிகர் சூர்யா உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா - சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இப்படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்காக, இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படமும் அக். 10 ஆம் தேதிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஜெயிலர் படத்திற்குப் பின் ரஜினி நடிக்கும் படமென்பதால், தமிழகத்தில் ரஜினியின் படத்தை வாங்கவே விநியோகிஸ்தர்கள் முயல்வார்கள். மேலும், இப்படத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி என மொழிக்கு ஒரு நட்சத்திர நடிகரை வைத்திருப்பதால் பான் இந்தியளவில் வேட்டையன் படத்தின் வியாபாரமே ஓங்கும்.

சூர்யா - மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில்....

இதனால், கங்குவா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக, மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சூர்யா, “ரஜினி சாரின் வேட்டையன் திரைப்படம் அக். 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நான் பிறக்கும்போது சினிமாவுக்கு வந்த மூத்தவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கிறார். சூப்பர் ஸ்டார் வருவதுதான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். நீங்களும் (ரசிகர்கள்) என்னுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். கங்குவா ஒரு குழந்தை. அது திரைக்கு வரும் நாள் கொண்டாட்டமாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.

கங்குவாவின் மறுவெளியீட்டுத் தேதி விரைவில் வெளியாகும் என்றே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஷாலின் மகுடம் போஸ்டர்!

விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை: ஓபிஎஸ்

ஹைதராபாத்தில் 69 அடி உயர விநாயகர் சிலை!

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் Trump

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

SCROLL FOR NEXT