மின்னல் முரளி போஸ்டர் 
செய்திகள்

மின்னல் முரளி 2 எப்போது? டோவினோ தாமஸ் பதில்!

மிகவும் கவனம் ஈர்த்த மின்னல் முரளி படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் டோவினோ தாமஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.

DIN

மலையாள நடிகர்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் டோவினோ தாமஸ். தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான 2018, அன்வேஷிப்பின் கண்டேத்தும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. நடிகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

மின்னல் முரளி

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என 5 மொழிகளில் இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ சூப்பர் ஹீரோவாக நடித்த ‘மின்னல் முரளி’ படம் 2021இல் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

கரோனா காரணமான நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியான இந்தப் படம் 2021-ன் சிறந்த மலையாளத் திரைப்பட ஐஎம்டிபி வரிசையில் 2 ஆம் இடத்தைப் பெற்று அசத்தியதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது. அதன்பிறகு அவர் மலையாள படங்களில் நடிக்க அதன் மொழியை கற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

ப்ரூஸ் லீ கதாபாத்திரத்தில் நடித்த பெமினா ஜார்ஜின் நடிப்பும் இந்தப் படத்தில் கவனம் ஈர்த்தது.

மின்னல் முரளி -2

தற்போது இதன் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் டோவினோ தாமாஸ் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது:

இயக்குநர் பாசில் ஜோசப்பை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறேன். மிக விரைவில் பாசில் ஜோசப் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். ஆனால், அது மின்னல் முரளி படத்தின் இரண்டாம பாகம் அல்ல.

மின்னல் முரளியின் முதல் பாகத்துக்கான திரைக்கதை மிகவும் இயற்கையாக வந்தது. அதுதான் படத்தி வெற்றி. அதனால், இதன் இரண்டாம் பாகத்துக்கு நாங்கள் எதையும் பலவந்தமாக முயற்சிக்கவில்லை. நடக்க வேண்டுமென இருந்தால் அது கண்டிப்பாக நடக்கும். நல்ல திரைக்கதைக்காக காத்திருக்கிறேம் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT