விக்ராந்த்தின் புதிய பட பூஜை புகைப்படம்.  படம்: எக்ஸ்/ பிக் பேங் சினிமாஸ்
செய்திகள்

விக்ராந்த்தின் புதிய திரைப்படம்!

நடிகர் விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் விக்ராந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் விக்ராந்த். இவர் நடிகர் விஜய்யின் சகோதரர் உறவுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டியநாடு படங்களின் மூலம் கவனம் பெற்றார்.

ஓடிடியில் வெளியாகாத லால் சலாம்

கடைசியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் விக்ராந்த் நடித்திருந்தார்.

இந்தப் படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இதுவரை எந்தவொரு ஓடிடியிலும் வெளியாகாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய படம்

தற்போது, வில் அம்பு பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை பிக் பேங் சினிமாஸ் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை (செப்.7) மாலை 5 மணிக்கு வெளியாகவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT