திவ்யதர்ஷினி படங்கள்: இன்ஸ்டா / திவ்யதர்ஷினி
செய்திகள்

கடந்த 10 ஆண்டுகளில் 4ஆவது அறுவைச் சிகிச்சை..! திவ்யதர்ஷினி பகிர்ந்த துயரம்!

தொகுப்பாளினியும் நடிகையுமான திவ்யதர்ஷினி தனக்கு நடைபெற்ற அறுவைச் சிகிச்சை குறித்து பதிவிட்டுள்ளார்.

DIN

தொலைக்காட்சி, திரைப்பட புரோமோஷன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி.

விசில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அதன்பின் தொகுப்பாளினி பணியை மேற்கொண்டு வருகிறார்.  தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி’, சுந்தர்.சியின் ‘காபி வித் காதல்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து விவாகரத்துப் பெற்ற திவ்ய தர்ஷ்னி விரைவில் தொழிலதிபர் ஒருவரை மறுமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியது.

ஐக்கிய அரபு அமீரகம் திவ்யதர்ஷினிக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடைசியாக வெளியான ஜோஷ்வா இமைப்போல் காக்க படத்தில் நடித்திருந்தார். வெளியாகாத துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார்.

மத்தகம் இணையத் தொடரிலும் கவனம் ஈர்த்தார். இந்நிலையில் தனக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது குறித்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

10 ஆண்டுகளில் 4ஆவது அறுவைச் சிகிச்சை

கடைசி 3 மாதங்கள் எனக்கு கடினமாக இருந்தன. 2 மாதங்களுக்கு முன்பு எனது முட்டியில் மிகப்பெரிய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. எனது வலது முட்டியில் கடந்த 10 ஆண்டுகளில் இது 4ஆவது அறுவைச் சிகிச்சை. இதுதான் கடைசி அறிவைச் சிகிச்சையாக இருக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.

இந்த 2 மாதங்கள் மிகவும் வலி மிகுந்ததாக இருந்தது. ஆனால் அத்துடன் முன்னேற்றமும் இருந்தது. மிகவு ம் கடினமாக உழைத்தேன். 2 மாத சிகிச்சைக்குப் பிறகு இதைப் பதிவிடுகிறேன். என்னை திரையில் ரசித்த மக்களுக்கும் எப்போதும் ஆதரவு அளிக்கும் ரசிகர்களுக்கும் எனது வலியை புரிந்துகொள்வீர்களென இதை பதிவிடுகிறேன்.

இதுவரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. எனது கடினமான நாள்களில் உங்களது அன்பும் ஆதரவும்தான் என்னை மீட்டது. இதற்கு முன்பு இருந்ததைவிட தற்போது மீண்டும் திடமாக வருவேன் என நம்புகிறேன்.

ஆசிர்வாதத்துக்கு நன்றி

முக்கியமாக எனது மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கடைசியாக ஒன்று. நான் எங்காவது நடந்து செல்வதைப் பார்த்தால், நீங்கள் எனக்காக கடந்த 10 ஆண்டுகளில் வாழ்த்தியிருந்தீர்களானால் என்ன்னிடம் வந்து ஒரு ஹாய் சொல்லுங்கள். எனது ஆசிர்வாதங்களை நான் கணக்கிட வேண்டும். வலுவடைந்து வருகிறேன். விரைவில் சந்திப்பேன். புதிய முட்டியுடன் புதிய நான். அன்புடன் டிடி என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT