செய்திகள்

ரசிகர்களைக் கவரும் மனசிலாயோ!

மனசிலாயோ பாடல் கவனம் பெற்று வருகிறது.

DIN

வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடல் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அனிருத் இசையமைத்த வேட்டையன் படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடலை வெளியிட்டுள்ளனர்.

சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு எடவன் வரிகளில் உருவான இப்பாடலை அனிருத், யுகேந்திரன் வாசுதேவன், தீப்தி சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.

மேலும் சில வரிகளுக்காக மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தியுள்ளனர். 27 ஆண்டுகளுக்குப் பின் தொழில்நுட்ப உதவியோடு ரஜினி படத்தில் பாடியுள்ளார் மலேசியா வாசுதேவன்.

மேலும், இப்பாடலைக் கேட்கும் ரசிகர்கள் இந்தாண்டின் வைரல் பாடல்களில் ஒன்றாக இது இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியில் இதற்கு முன் உருவான, ‘மரண மாஸ்’ (பேட்ட), சும்மா கிழி (தர்பார்), தலைவர் நிரந்தரம் (ஜெயிலர்) ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. தற்போது, இந்த வரிசையில் மனசிலாயோ பாடலும் இடம்பெறும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த வீடு இல்லாதது குற்றமா? 3 பிஎச்கே சொல்ல வருவது என்ன?

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

SCROLL FOR NEXT