பொங்கல் வெளியீடாக தக் லைஃப், விடாமுயற்சி?
தக் லைஃப், விடாமுயற்சி வெளியீட்டுத் தகவல்...
தக் லைஃப் மற்றும் விடாமுயற்சி படங்களின் வெளியீடு குறித்து தகவல் கசிந்துள்ளது.
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அஜித் குட் பேட் அக்லியில் நடித்து வருகிறார்.
இப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக வெளிவரும் என அறிக்கப்பட்டிருந்தது. ஆனால், விடாமுயற்சி படமே முடிவடையாமல் இருப்பதால், பொங்கலுக்கு விடாமுயற்சியை வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது.
Advertisement
Advertisement
அதேநேரம், நடிகர் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தற்போது, இதன் படப்பிடிப்பு ஜெர்மனியில் நடைபெற்று வருவதாகவும் இதில் நடிகர்கள் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வனுக்கான காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், 2025 பொங்கல் வெளியீடாக தக் லைஃப் திரைப்படமும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.