ஜெயம் ரவி - ஆர்த்தி ரவி.  படம்: இன்ஸ்டாகிராம் / ஜெயம் ரவி.
செய்திகள்

கணவராக 100க்கும் அதிகமான மதிப்பெண்கள் தரலாம்..! ஆர்த்தி ரவியின் வைரல் விடியோ !

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி பேசிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

DIN

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

தற்போது, ஜெயம் ரவி பிரதர், காதலிக்க நேரமில்லை படங்களில் நடித்து முடித்துள்ளார்.

சில மாதங்களாக, ஜெயம் ரவியும் - ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இருவரும் விவாகரத்து முடிவில் இருப்பதாகவும் வதந்திகள் பரவின.

நேற்று (செப். 9) ஜெயம் ரவி தன் மனைவியைப் பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இதனால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தது உறுதியானது.

தற்போது எக்ஸில் ஆர்த்தி ரவி, ஜெயம் ரவி பேசிய விடியோக்கள் வைரலாகி வருகின்றன.

அதில் ஆர்த்தி ரவி நேர்காணல் ஒன்றில், “ எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது என்னுடைய வாந்தியை அவர் கையில் பிடித்திருக்கிறார். இதுபோல பல முறை என்னை அன்பாக பார்த்துக்கொண்டிருக்கிறார்.

எனக்கு இரவு 3 மணிக்கு இது வேண்டுமென்றால் உடனடியாக வந்து செய்துகொடுப்பார். அதை முடித்துவிட்டு எபோது தூங்குவார் தெரியவில்லை. பின்னர் படப்பிடிப்புக்கும் செல்லுவார். கணவராக அவருக்கு 100க்கும் அதிகமான மதிப்பெண்களை தருவேன். இதுமாதிரியான கணவர் அனைவருக்கும் அமைய வேண்டும்” எனக் கூறியிருப்பார்.

ஜெயம் ரவி, “என்னுடைய மனைவி இல்லாவிட்டால் நான் இல்லை” எனக் கூறியிருப்பார்.

இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது ஜெயம் ரவிக்கு கடினமான நேரம் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதற்குமேல் என்ன கேட்பது..!? தேசிய விருது குறித்து அட்லீ!

தீராத விளையாட்டுப் பிள்ளை... 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

ஜார்க்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரனுக்கு மூளையில் காயம்: தில்லி மருத்துவமனைக்கு மாற்றம்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

குற்றவாளி என தீர்ப்பு! நீதிமன்றத்தில் தனித்துவிடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா

SCROLL FOR NEXT