விஜய் சேதுபதி  இன்ஸ்டாகிராம்
செய்திகள்

பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறை... இன்று வெளியாகிறது முன்னோட்டக் காட்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சி இன்று வெளியீடு.

DIN

பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக இந்நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சி மக்களால் வெளியிடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

ஆனால், சில மாதங்களுக்கு முன் பிக்பாஸ் - 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என அவர் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபலம் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

பிக்பாஸ் - 8 சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளதாக முன்னதாக அறிவிப்பு வெளியாகி, அதற்கான டீசரும் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இதுவரை எந்த சீசன்களில் இல்லாத வலையில் பிக் பாஸ் - 8 நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சி(ப்ரோமோ) மக்களால் வெளியிடப்படும் என்று தொலைக்காட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளத்து.

இன்று(செப். 11) மாலை 5 மணிக்கு சென்னை பெசன்ட் நகரில் ப்ரோமோ வெளியிடப்படவுள்ளது. முன்னதாக வெளியான டீசர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில், ப்ரோமோ குறித்து பார்வையாளர்களிடம் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சியில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் இவர்களுடன் நடிகர் வினோத் பாபு, அருண் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நடிகை பவித்ரா ஜனனி, அக்‌ஷிதா, குக் வித் கோமாளி பிரபலம் ஜோயா உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க நாளில்தான் யார் யார் பங்கேற்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT