இயக்குநர் வி.கே.பிரகாஷ். 
செய்திகள்

பாலியல் வன்கொடுமை வழக்கு: மலையாள இயக்குநருக்கு முன்ஜாமீன்!

இயக்குநர் விகே பிரகாஷுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

DIN

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய இயக்குநர் வி. கே. பிரகாஷுக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளது.

மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் உள்பட பலரும் விலகினர்.

நடிகர் ஜெயசூர்யா தன் மீதான குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்பேன் எனக் கூறியுள்ளார்.

மேலும், பிரபல மலையாள இயக்குநரான வி. கே. பிரகாஷ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தாக பெண் திரைக்கதையாசிரியர் புகார் அளித்திருந்தார்.

புகாரில், 2022 ஆம் ஆண்டு திரைப்பட விவாதத்திற்காக வி. கே. பிரகாஷ் தன் வீட்டிற்கு அழைத்து எதிர்பாராத நேரத்தில் முத்தம் கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றதாகவும் அதை மறுத்து அங்கிருந்து தப்பியதும் தன் வங்கிக்கணக்கில் ரூ. 10 ஆயிரம் அனுப்பி, யாரிடமும் இதைப்பற்றிக் கூற வேண்டாம் என்றதாக பாதிக்கப்பட்ட திரைக்கதையாசிரியர் கூறியுள்ளார். தற்போது, இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு வி. கே. பிரகாஷ் மனு அளித்திருந்தார். இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது. இறுதியில், வி. கே. பிரகாஷுக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

முன்னதாக, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நடிகர்கள் முகேஷ் மற்றும் இடவேல பாபு ஆகியோருக்கு முன்ஜாமீன் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT