கங்குவா  
செய்திகள்

கங்குவா வெளியீட்டுத் தேதி அறிவிப்பு?

நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DIN

நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் பாபி தியோல் நடித்துள்ள திரைப்படம் கங்குவா. சூர்யாவின் திரைப்படங்களில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் முன்னோட்டம் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டுத் தேதி அக்டோபர் 10 என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படமும் அக். 10 ஆம் தேதிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படம் என்பதாலும், இந்தியா சினிமாவின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா என பலரும் நடித்திருப்பதாலும் வேட்டையன் படம் அதிகளவிலான திரையரங்குகளைக் கைப்பற்றும் என கூறப்பட்டது.

எனவே, வேட்டையன் படத்துடன் இந்திய அளவில் கங்குவா படத்தினை வெளியிடுகையில் வசூல் பாதிக்கும் என தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்ததால், படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்க முடிவு செய்ததாகக் கூறப்பட்டது.

மேலும், மறுவெளியீட்டுத் தேதி அறிவிப்பு வெளியாகாமல் இருந்ததால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து, தற்போது ரசிகர்களை மகிழ்விக்கும் செய்தியாக படத்தின் மறு வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் சில நாள்களில் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருகிற நவம்பர் 14 ஆம் தேதியன்று கங்குவா திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT