இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகரி ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் ‘கூலி’. இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
ரஜினியின் 171 - வது திரைப்படமாக தயாராகி வரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
தங்கத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு டீசர் வெளியிடப்பட்டது. இதனால், இப்படம் தங்கக் கடத்தல் பின்னணியில் ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஜூலை 5 ஆம் தேதி தொடங்கியது.
இந்த நிலையில், தற்போது படக்குழுவினரின் ஓணம் கொண்டாட்ட விடியோ வெளியாகியுள்ளது. இந்த விடியோவில் வேட்டையன் படத்தின் ‘மனசிலாயோ’ பாடலுக்கு படக்குழுவினருடன் ரஜினி நடனமாடுகிறார்.
கூலி திரைப்படம் அடுத்த ஆண்டு இறுதியில் திரைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.