ரேஷ்மா முரளிதரன் இன்ஸ்டாகிராம்
செய்திகள்

8 ஆண்டுகளில் 4 தொடர்கள்! நடிகை ரேஷ்மாவுக்கு குவியும் பாராட்டுகள்!

நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரேஷ்மா, வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்டதால், தொடர்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை ரேஷ்மா முரளிதரன் சின்னத்திரையில் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதோடு மட்டுமின்றி 4 வெற்றிகரமானத் தொடர்களிலும் நடித்துள்ளார்.

தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரேஷ்மா, தனக்கான வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்டதால், தற்போதும் தொடர்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

பூவே பூச்சூடவா

ரேஷ்மா முரளிதரன் நடிப்பில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017 முதல் 2021 வரை ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொடர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இத்தொடர் 1,149 நாள்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பானது.

பூவே பூச்சூடவா போஸ்டர்

அபி டெய்லர்

இதனைத் தொடர்ந்து ரேஷ்மா நடித்த அபி டெய்லர் தொடர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 2021 முதல் 2022 வரை ஒந்தத் தொடர் ஒளிபரப்பானது. இதில் நாயகனாக நடித்த மதன் பாண்டியனை ரேஷ்மா காதலித்தி திருமணம் செய்துகொண்டார். பூவே பூச்சூடவா தொடரிலும் மதன் பாண்டியன் நடித்திருந்தார்.

அபி டெய்லர் போஸ்டர்

கிழக்கு வாசல்

பின்னர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பான கிழக்கு வாசல் தொடரிலும் ரேஷ்மா நாயகியாக நடித்திருந்தார். இந்தத் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் 200 எபிஸோடுகளே ஒளிபரப்பானது.

கிழக்கு வாசல் போஸ்டர்

நெஞ்சத்தைக் கிள்ளாதே

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடரில் ரேஷ்மா முரளிதரன் நாயகியாக நடித்து வருகிறார். நடிகர் ஆகாஷ் நாயகனாக நடிக்கிறார். இந்தத் தொடர் கடந்த மே மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

நெஞ்சத்தைக் கிள்ளாதே போஸ்டர்

மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்ற ரேஷ்மா

கேரளத்தைச் சேர்ந்த ரேஷ்மா முரளிதரன், சென்னையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். அப்போது மாடலிங்கில் ஈடுபாடு இருந்ததால், மிஸ் மெட்ராஸ் 2016-ல் இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார்.

மேக்கப் இல்லாமல் புகைப்படங்களை எடுத்துப் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்ட ரேஷ்மா முரளிதரன், சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர். தற்போது சின்னத்திரையில் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரேஷ்மா முரளிதரனுக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதோடு மட்டுமின்றி யூடியூப் சேனலையும் ரேஷ்மா முரளிதரன் நடத்தி வருகிறார். குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் ரேஷ்மா அடிக்கடி பள்ளிக்கு விருந்தினராக அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT