மூன்று முடிச்சு தொடரில் நடிகை ஸ்வேதா இன்ஸ்டாகிராம்
செய்திகள்

சீரியலில் நடிக்கும் அஜித் பட இயக்குநர்!

திரைக்கதை ஆசிரியரும் இயக்குநருமான அகத்தியன் மூன்று முடிச்சு தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

DIN

திரைக்கதை ஆசிரியரும் இயக்குநருமான அகத்தியன் மூன்று முடிச்சு தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அஜித் குமார் நடிப்பில் வெளியான காதல்கோட்டை, வான்மதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அகத்தியன், தற்போது சின்னத்திரையில் நடிப்பது மூன்று முடிச்சு தொடரின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு மூன்று முடிச்சு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நடிகர் நியாஸ் நாயகனாகவும், ஸ்வாதி கோண்டே நாயகியாகவும் நடித்து வருகின்றனர்.

இது மட்டும் இல்லாமல் ப்ரீத்தி சஞ்சீவ் அம்மாவாகவும், நடிகர் பிரபாகரன் அப்பாவாகவும் நடித்துள்ளனர். கதாநாயகியின் தந்தையாக இயக்குநர் பாரதிராஜாவின் சகோதரர் தேனி முருகன் நடித்து வருகிறார்.

மூன்று முடிச்சு தொடரின் போஸ்டர்

மறைந்த நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா படத்தின் கதை ஆசிரியரும், தென்னவன் படத்தை இயக்கிய இயக்குனருமான நந்தன் சி முத்தையா இந்தத்தொடரை இயக்குகிறார்.

கிராமத்துப் பின்னணி கொண்ட ஏழைப் பெண்ணான நந்தினிக்கும் (ஸ்வேதா) செல்வந்த குடும்பத்தில் பிறந்த அன்புக்கும் (நியாஸ்) இடையிலான கதையே மூன்று முடிச்சு.

மூன்று முடிச்சு தொடரில் இயக்குநர் அகத்தியன் (முதல் படம்)

நடிகரான இயக்குநர் அகத்தியன்

இந்தத் தொடரில் நடிகை தர்ஷனா புதிதாக அறிமுகமானார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவா தலையா தொடரில் நாயகியாக நடித்தவர்.

இந்நிலையில் இயக்குநர் அகத்தியன் இந்தத் தொடரில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான காதல் கோட்டை, வான்மதி, உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் அகத்தியன். காதல் கோட்டை திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை, இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்

விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற சில படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். சில படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். சஞ்சய் கபூர் - பிரியா கில் நடிப்பில் வெளியான சிர்ஃப் தும் என்ற ஹிந்தி படத்தையும் அகத்தியன் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மூன்று முடிச்சு தொடரில் இவர் நடிக்கவுள்ளதால், இந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

79 மீட்டா் நீள தேசியக் கொடி வரைந்த பள்ளி மாணவா்கள்

தமிழகத்தில் ஆக. 20 வரை மழை நீடிக்கும்

அவசர ஊா்தியில் கா்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தை

பெருங்கட்டூா் பள்ளி மேலாண்மைகத் குழுக் கூட்டம்

நீதித் துறை தோ்வெழுத கட்டாய 3 ஆண்டு வழக்குரைஞா் பணி: தீா்ப்பை மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

SCROLL FOR NEXT