நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஆனந்த் எல். ராய். 
செய்திகள்

இப்போது இயக்கியிருந்தால் அம்பிகாபதியை வேறு மாதிரி எடுத்திருப்பேன்: ஆனந்த் எல். ராய்

DIN

அம்பிகாபதி திரைப்படம் குறித்து இயக்குநர் ஆனந்த் எல். ராய் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவான ராஞ்சனா (தமிழில்: அம்பிகாபதி) திரைப்படம் இந்தியளவில் பெரிய வெற்றிப்படமானது.

காதலும் அரசியலும் கலந்த திரைப்படமாக காசியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

முக்கியமான, ஏ. ஆர். ரஹ்மானின் பாடல்கள் பரவலாக ரசிக்கப்பட்டன. இன்றும், தமிழில் 'உன்னால், உன்னால்’, ‘கலாரசிகா’ பாடல்கள் பலரது விருப்பப்பட்டியலில் உள்ளன.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஆனந்த் எல். ராய், “இன்றைய ரசிகர்கள் நம் காலத்திலிருந்ததைவிட மிக இளையவர்கள் என்பதை உணர்கிறேன். ரசிகர்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. என் எண்ணங்களை விரிவாக்க இது உதவுகிறது. அம்பிகாபதி திரைப்படத்தை விரும்புபவர்கள் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள்.

ஒருவேளை நான் இன்று அம்பிகாபதி படத்தை எடுத்திருந்தால் இன்றைய ரசிகர்களுக்கு ஏற்ப என் கதை சொல்லல் பாணியில் மாற்றத்தை செய்திருப்பேன். ஒரு படைப்பாளி காலத்திற்குத் தகுந்ததுபோல் புதிய முயற்சிகளுக்கும் மாறுதல்களுக்கும் தயாராக இருக்க வேண்டும். அதனால்தான் நான், ’தேரே இஸ்க் மெய்ன்’ படத்தை எடுக்கிறேன். அம்பிகாபதி - 2 அல்ல. ” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக, நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஸ்க் மெய்ன்’ படத்தில் நடிக்கிறார். அம்பிகாபதி படத்திற்குப் பின் மீண்டும் ஆனந்த் - தனுஷ் கூட்டணி இணைவதால் இப்படத்திற்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதுவும் அரசியல் மற்றும் காதல் கதையாக இருக்குமென்றே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT