செய்திகள்

மனைவியின் புகைப்படங்களை நீக்கிய ஜெயம் ரவி!

ஜெயம் ரவி தன் மனைவியின் புகைப்படங்களை இன்ஸ்டாவிலிருந்து நீக்கியுள்ளார்...

DIN

ஜெயம் ரவி இன்ஸ்டாகிராமிலிருந்த மனைவியின் புகைப்படங்களை நீக்கியுள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

செப். 9ஆம் தேதி தன் மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்ட நிலையில், சென்னை நீதிமன்றத்தில் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மனுவும் அளித்துள்ளார்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு ஜெயம் ரவியின் முடிவானது கலந்து ஆலோசிக்காமல் அவரே தன்னிச்சையாக எடுத்தது என்று ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்

பாடகி கெனிஷாவுடன் தொடர்பு இருப்பதாக வதந்திகள் கிளம்பியிருந்தன. தொடர்ந்து, பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெயம் ரவி, “நான் ஒன்றேயொன்றுதான் சொல்ல விரும்புகிறேன். இதில் யாரையும் இழுக்காதீர்கள். வாழு வாழவிடு. கெனிஷா 600 மேடைகளில் பாடியுள்ளார்கள்.

தனியாக நின்று வளர்ந்தவர். பல உயிரைக் காப்பாற்றிய ஹீலர் (குணப்படுத்துபவர்). சான்றிதழ் பெற்ற உளவியலாளர். அவரை இப்படி இழுக்காதீர்கள். நானும் கெனிஷாவும் இணைந்து வருங்காலத்தில் ஒரு ஹீலிங் சென்டர் (குணப்படுத்தும் மையம்) அமைக்கவிருக்கிறோம். பலருக்கும் உதவ வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.” எனக் கூறினார்.

சில மாதங்களுக்கு முன் ஆர்த்தி தன் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்த ஜெயம் ரவியின் புகைப்படங்களை நீக்கினார். இதுவே, சந்தேகத்திற்கு வழி வகுத்தலும் ஜெயம் ரவியின் கணக்கில் அவரும், ஆர்த்தியும் இருக்கும் புகைப்படங்கள் அப்படியே இருந்தன.

ஆனால், ஜெயம் ரவி தன் இன்ஸ்டாகிராம் கணக்கை மனைவியின் குடும்பத்தினரே நிர்வகித்து வந்ததாகக் கூறினார். தற்போது, ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்த மனைவி, மகன்களின் புகைப்படங்களும் நீக்கப்பட்டுள்ளது. இறுதியாக, அவர் பதிவிட்ட தன் புகைப்படத்துடன், ‘புதிய நான்’ எனக் குறிப்பிட்டுள்ளார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT