ஒரு பக்கம் விரதம், மறுபக்கம் படப்பிடிப்பு. 
செய்திகள்

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!

பாதியில் நிறுத்தப்பட்ட நடிகர் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.

DIN

ஆந்திரத்தில் முக்கியமான நடிகராக இருக்கும் பவன் கல்யாண் தனது ஜன சேனா கட்சியை 2014இல் துவக்கினார். தற்போது ஆந்திரத்தின் துணை முதல்வராக உயர்ந்துள்ளார்.

பவன் கல்யாண் நடிப்பில் 3 படங்கள் (ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங், ஓஜி) வெளியாகாமல் தாமதிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஹரி ஹர வீர மல்லு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.

கிறிஸ் ஜகர்லமுடி, ஜோதி கிருஷ்ணா இணைந்து இயக்கும் ஹர ஹர வீரமல்லு படத்தின் அப்டேடினை தயாரிப்பாளர் மெகா சூர்யா புரடக்‌ஷன்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு இன்று காலை 7 மணிக்கு விஜயவாடாவில் தொடங்கியதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் படம் அடுத்தாண்டு மார்ச் 28ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை விஜயவாடாவில் அமைந்துள்ள துர்கா மல்லேஸ்வரா சுவாமி வர்லா தேவஸ்தான கோயிலில் 11 நாள் பிராயச்சித்த தீக்‌ஷை என்ற பெயரில் விரதத்தை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, இன்று காலை கோயில் படிகளை சுத்தம் செய்யும் பணிகளில் பக்தர்களுடன் ஈடுபட்டார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் கார்த்தியை லட்டு விவகாரத்தில் கண்டித்திருந்ததும் சமூக வலைதளங்களில் வைரலாவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT