வாழை பட போஸ்டர்.  
செய்திகள்

7 மொழிகளில் ஓடிடியில் வெளியாகும் வாழை! அதிகாரபூர்வ அறிவிப்பு!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார்.

இந்தப் படம் ஆக.23இல் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பும் கிடைத்தது.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலராலும் பாராட்டப்பட்டாலும் சிலரால் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தப்படம் அக்.11ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் செப்.27 எனக் கூறப்பட்ட வந்த நிலையில் தற்போது பல மொழிகளில் வெளியாகிறது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT