வேட்டையன் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் அமிதாப் பச்சன் குரல் 
செய்திகள்

வேட்டையன் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் அமிதாப் பச்சன் குரல்!

வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தவிருக்கிறார்கள்.

DIN

ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

லைகா தயாரித்த இப்படம் வருகிற அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னையில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், நடிகர்கள் ரஜினிகாந்த், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா, ரித்திகா சிங் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் சத்யதேவ் பாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னோட்ட விடியோவில் அவரது குரலுக்குப் பதிலாக பிரகாஷ் ராஜ் குரல் பயன்படுத்தப்பட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதைக் கருத்தில்கொண்டு படக்குழு ஏஐ உதவியுடன் அமிதாப் பச்சன் குரலை அனைத்து மொழிகளுக்கும் பயன்படுத்தவிருக்கிறார்கள்.

வேட்டையன் படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’ சமீபத்தில் வெளியாகி 20 மில்லியன் (2 கோடி) யூடியூப் பார்வைகளைக் கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை கோயிலில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற ஆட்சியா் ஆய்வு

காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு பேரணி

சாலை வசதி கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியல்

வடக்கு பச்சையாறில் மீன் பிடிக்க குத்தகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

விட்டில் பூச்சிகள்...

SCROLL FOR NEXT