ஹரிஷ் கல்யாண்  
செய்திகள்

உண்மையான வெற்றி எது தெரியுமா? வெற்றி விழாவில் ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

லப்பர் பந்து வெற்றி விழாவில் நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசியதாவது...

DIN

தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள லப்பர் பந்து படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் மையக் கதாபத்திரமாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஸ்வாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், தேவ தர்ஷிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிமிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன.

கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்பப் படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இந்த வாரம் 6 தமிழ்ப் படங்கள் வெளியான நிலையில், இப்படமே பரிந்துரை பட்டியலில் இருப்பதால் பல திரையரங்குகளில் படத்திற்குக் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் வெற்றி விழாவில் ஹரிஷ் கல்யாண் பேசியதாவது:

படத்தை மக்களிடம் கொண்டு சென்றதுக்கும் இயக்குநரின் எழுத்தைக் கொண்டாடியதுக்கும் பதிரிகையாளர்களுக்கு மிக்க நன்றி. விஜயகாந்த் சாரின் ஆசிர்வாதம் எங்களுக்கு மிகவும் உதவியது. அவரது குடும்பத்தினை சந்தித்ததில் மகிழ்ச்சி.

எனது அப்பா எதையும் தலைக்கு எடுத்துக்கொண்டு போகாதே, இதயத்தில் வைத்துக்கொள் என்பார். அதுபோல, இந்த நெகிழ்ச்சியான வெற்றியை இதயத்துக்குள் வைத்து கொள்கிறேன்.

மக்கள் இந்தப் படத்தை இவ்வளவு கொண்டாடுவார்கள் என நினைக்கவில்லை. திரையரங்குக்கு சென்று படம் பார்த்தேன். வசூலினைவிட அது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினேன். அதற்கு அங்கிருந்த ஒருவர் எழுந்து, ‘உங்களைவிட படம் பார்த்து இரண்டு மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என கூறினார். அதுதான் உண்மையான வெற்றியாக இருக்குமென நினைக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT